"அமித்ஷா உள்துறை அமைச்சர்தானே? அவரை சந்தித்தால் என்ன தப்பு?"- எடப்பாடி பழனிசாமி

 
eps eps

தமிழ்நாடு முதலமைச்சர் துணை முதலமைச்சர் பிரதமர் மோடியின் கதவை தட்டினார்களே.. அவர்கள் யாருடைய கதவை தட்டினார்கள். அவர்கள் கதவை தட்டினால் சரி நாங்கள் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தால் தப்பு. இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் தானே அமித்ஷா அவர் வேறு யாரும் இல்லையே. இதில் என்ன தவறு இருக்கின்றது என்று புரியவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

EPS

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “46 சட்டமன்ற தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு ஸசுமார் 15 லட்சம் பொதுமக்களை சந்தித்துள்ளேன். மக்களுடைய வரவேற்பு ஆரவாரம் முகத்தில் பார்க்கின்ற மகிழ்ச்சி 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் நிகழ்ச்சி இதுவரை தெரியவில்லை. பத்திரிக்கையில் தான் வந்துள்ளது, அதிகாரப்பூர்வமாக இன்னும் தகவல் கிடைக்கவில்லை. எந்தெந்த நேரத்தில் எந்தெந்த பகுதிக்கு பிரதமர் மோடி செல்கிறார் என்ற முழு விவரம் தெரியவில்லை, விவரம் கிடைத்தவுடன் பிரதமர் மோடி சந்திப்பு குறித்து தெரிவிக்கப்படும். முழு விவரம் கிடைத்தால் தான் எந்த இடத்தில் சந்திப்பது என்று நேரம் கேட்கப்படும்.

விசிக தவெக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து எங்கேயாவது நான் வெளிப்படுத்தி உள்ளேனா?. 46 சட்டமன்ற தொகுதிகளிலும் பேசியுள்ளேன். பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளேன் எங்கேயாவது நான் கூட்டணிக்கு அவர்களை அழைத்தேனா? அவர்கள் தங்களை அடையாளம் படுத்திக்கொள்ள கூறுகின்றனர். பெரிய கட்சி கூட்டணிக்கு வரும்போது நான் கூறுகின்றேன். அதிமுக-பாஜக கூட்டணியை வெளியில் இருந்து பேட்டி கொடுப்பவர்கள் தான் உடைக்க நினைக்கின்றனர். வெளியே தவறுதலாக பேசிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் துணை முதலமைச்சர் பிரதமர் மோடியின் கதவை தட்டினார்களே... அவர்கள் யாருடைய கதவை தட்டினார்கள். அவர்கள் கதவை தட்டினால் சரி நாங்கள் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தால் தப்பு. இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் தானே அமித்ஷா அவர் வேறு யாரும் இல்லையே. இதில் என்ன தவறு இருக்கின்றது என்று புரியவில்லை.திமுக தலைவர்கள் என்னை எப்படி எல்லாம் பேசினார்கள்? அவர்களைப் பார்த்துதான் அரசியலில் கீழ் தரமான விமர்சனம் செய்வது குறித்து கேட்க வேண்டும். முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் என்னை எப்படி எல்லாம் கீழ்த்தரமாக பேசினார்கள். நான் அப்படி யாரையும் பேசவில்லை எந்த இடத்திலும் நான் மரியாதை குறைவாக பேசமாட்டேன். சில நேரத்தில் வேகமாக பேசுகின்ற பொழுது நீ நான் என்ற பேச்சுக்கள் வந்திருக்கும். அதைத் தவறு என்று எடுத்துக் கொண்டால் என்னை பற்றி என்னவெல்லாம் பேசினார்கள். ஒரு முதலமைச்சரை புழுவாக சென்றேன் என்று கூறினார்கள். ஊடகம் முன்பு அவர்களைப் போல் நான் நடந்து கொள்வது முறையல்ல. அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்” என்று தெரிவித்தார்.