"தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 3 லட்சத்து 90 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள்.. "- ஈபிஎஸ்

 
eps

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு - செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது.

Eps

இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 3 லட்சத்து 90 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள்.. ஒரு பெரிய திட்டமும் கொண்டு வரவில்லை... நிர்வாக திறமை இல்லாததால் கடன் மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றி, கொல்லைப்புறமாக தந்திரமாக ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். விஞ்ஞான ரதியில் ஊழல் செய்யும் ஒரே கட்சி திமுக. அதிமுகவைப் பார்த்து திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் வந்த புயல் எந்த ஆட்சியிலும் ஏற்படவில்லை.. தானே, வர்தா, கஜா என அடுத்தடுத்து வந்து டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்டது. கொரோனா காலத்திலும் 1000 ரூபாய் கொடுத்து அனைத்தையும் இலவசமாக கொடுத்தோம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என திமுக பகல் கனவு காண்கிறது, அது நிறைவேறாது, 200 தொகுதிகளில் வெற்றி என்பது அஇஅதிமுக கூட்டணிக்கு பொருந்தும். திமுக உறுப்பினர்கள் சோர்ந்து உள்ளார்கள். அங்கு உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. திமுக ஆட்சியில் மக்களை நேரடியாக சந்திக்க அமைச்சர்களே அஞ்சுகிறார்கள். அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். இன்னும் ஒரு ஆண்டுதான், நமக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை மறந்து வேலை பார்க்க வேண்டும்” என்றார்.