சட்டமன்றத்தில் தேவர் படத்தை வைத்தது அதிமுக அரசுதான்- எடப்பாடி பழனிசாமி
சட்டமன்றத்தில் தேவர் படத்தை வைத்தது அதிமுக அரசுதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சென்னை நந்தனத்தில் தேவர் சிலையை அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. பசும்பொன் தேவர் ஐயா தேசத்திற்காக வாழ்ந்த தலைவர். அதிமுக அரசு அவரது ஜெயந்தியை, அரசு விழாவாக அறிவித்தது. ஜெயலலிதா ஆட்சியின்போது தேவரின் திருவுருவ சிலைக்கு பதிமூன்றரை கிலோ தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. சென்னை நந்தனத்தில் திருவுருவச் சிலை வைக்கப்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டுவந்தார். தேவர்ன் பெருமையை பறைசாற்றும் விதமாக ஜெயந்திவிழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் என புரட்சித் தலைவர் அறிவித்தார். பசும்பொன், தேவ்ர திருமகனார் பிறந்த இந்த பூமி, தெய்வீக பூமி. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் தேசத்திற்காக வாழ்ந்த மாபெரும் தலைவர்” என்றார்.
-