"பச்சோந்தியை விட அதிகமாக நிறம் மாறுபவர் ஓபிஎஸ்" - ஈபிஎஸ் கடும் தாக்கு!!

 
ep

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. இடைக்கால பொதுச்செயலாராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் 72 நாட்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் ஈபிஎஸ். எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

ttn

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அதிமுக அலுவலகம் எங்கள் தரப்புக்கு தரப்பட்டுள்ளது.ஜூலை 11ஆம் தேதி தலைமை அலுவலகத்தில் புகுந்து பத்திரங்களை திருடி சென்றுள்ளனர்.பிரதான எதிர்க்கட்சி புகார் கொடுத்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுகவில் பிளவு என்பது கிடையாது, ஒரு சிலர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது .கட்சியின் உயர்ந்த பதவியில் இருந்தவர் கொள்ளை கூட்டத்திற்கு தலைமை தங்குவது போல வந்தார் கட்சி அலுவலக கதவை எட்டி உதைத்தவர்களை தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள்?  மன்னிப்பு கேட்டாலும் ஓபிஎஸ்-ஐ ஏற்க முடியாது. பச்சோந்தியை விட அதிகமாக நிறம் மாறுபவர் ஓபிஎஸ். ஓபிஎஸ்-க்கு கட்சிக்கும் விசுவாசம் கிடையாது, ஜெயலலிதாவிற்கு விசுவாசம் கிடையாது" என்றார்

ttn

தொடர்ந்து பேசிய அவர், "ரவுடிகளையும் குண்டர்களையும் வைத்து கட்சி நடத்துவது திமுக. திமுக ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சிக்கும் வந்ததும் ஒரு பேச்சு என பேசும். ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகிவிட்டது, நீட் தேர்விற்கு விலக்கு எங்கே? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கா சீரழிந்து விட்டது. சூதாட்டத்திற்கு யாரவது கருத்து கேட்பு கூட்டம் நடத்துவர்களா?" என்ட்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.