"தேர்தல் பிரசாரத்தின்போது என்னை தேவையில்லாமல் விமர்சிக்கிறார்கள்"- ஈபிஎஸ்

 
தேர்தல் பிரசாரத்தின்போது என்னை தேவையில்லாமல் விமர்சிக்கிறார்கள்.

எம்ஜிஆர், ஜெயலலிதா மக்களுக்காக உழைத்தவர்கள்... அவர்களுக்கு நாம்தான், மக்கள்தான் வாரிசு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாகையில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “நம்முடைய கட்சி பிஜேபிக்கு அடிமையாம். திரு.ஸ்டாலின் அவர்களே எங்கள் கட்சி தொண்டன் கூட யாருக்கும் அடிமை கிடையாது. தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்ததில் இருந்து என்னை பற்றி மட்டுமே பேசி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதிமுகவில் யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வரலாம், ஆனால் திமுகவில் அப்படி கிடையாது. தேர்தல் பிரசாரத்தின்போது என்னை தேவையில்லாமல் விமர்சிக்கிறார்கள். அதிமுக கொள்கை இல்லாத கட்சியா?அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள், அழிந்து போவார்கள்.பல்வேறு இன்னல்களை தாண்டி வலிமையாக நிற்கும் கட்சி அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா மக்களுக்காக உழைத்தவர்கள்... அவர்களுக்கு நாம்தான், மக்கள்தான் வாரிசு. கச்சத்தீவை கொடுத்ததே திமுக தான், இப்போது மீட்பதாக போராடுகிறார்கள். மக்களை ஏமாற்றும் நாடகம் ஒருபோதும் எடுபடாது. ஜனநாயகம் உள்ள கட்சி என்றால் அது அதிமுக மட்டும்தான். விவசாயிகளை துன்பத்தில் இருந்து மீட்பது தான் எனது கொள்கை.” என்றார்.