ஏப்.25இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

 
admk office admk office

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.

 

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடுளார் முதலனர் பாட்சிக் தமிழர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சென்னை, ராயப்பேட்டை அவ்வை என்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக பாட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் 25.4.2025  வெள்ளி கிழமை மாலை 4.30 மணிக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச்செயலளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமை புரட்சித்தமிழர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.