“தமிழ்நாட்டிற்கு 1 டிரில்லியனும் வராது, 1.5 டிரில்லியனும் வராது”- திடீரென டென்ஷன அன சி.வி.சண்முகம்

 
“தமிழ்நாட்டிற்கு 1 டிரில்லியனும் வராது, 1.5 டிரில்லியனும் வராது”- திடீரென டென்ஷன அன சி.வி.சண்முகம்

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அரசியல் தான் நடக்கிறது. இதனால் த.வெ.க அரசு சொல்வது போல் தமிழ்நாட்டிற்கு 1 டிரில்லியனும் வராது, 1.5 டிரில்லியனும் வராது என அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம், “தமிழகத்தில் தொழிற்சாலைகள் வராததற்கு அரசியலே காரணம். அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்தை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என போராட்டம் நடத்தியது திமுக. அதே விவசாயிகள் குறித்து கவலைப்படாமல் பரந்தூர் விமான நிலையம் வேண்டும் என திமுக கூறுகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலைபாடு ஆளும்கட்சியாக இருந்தால் ஒரு நிலைபாடு எடுக்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. திமுக கொண்டுவந்த பரந்தூா் விமான நிலையத்திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது. பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் அரசியல் தான் நடக்கிறது. இதனால் த.வெ.க அரசு சொல்வது போல் தமிழ்நாட்டிற்கு 1 டிரில்லியனும் வராது, 1.5 டிரில்லியனும் வராது. 

தமிழகத்திற்கான வளர்ச்சி தடுக்கப்படுகிறது.  தொழிற்சாலைகள் உருவாக வேண்டுமென்றால் சாலை, விமான நிலையங்கள் போன்ற உட்கட்டமைப்புகள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வரவில்லை. லட்சக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்துவருகின்றனர். அரசாங்கத்தில் வேலையும் இல்லை, வேலையும் வழங்கப்படுவதில்லை. வேலைவாய்ப்புகள் இருக்க வேண்டுமென்றால் தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும்” என்றார்.