பாலின் விலையை சத்தமில்லாமல் உயர்த்திய திமுக அரசு?- அதிமுக குற்றச்சாட்டு

 
eps eps

அத்தியாவசிய பொருளான பாலின் விலையை திமுக அரசு சத்தமில்லாமல் உயர்த்தியதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆவின் பால் ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி என்னவானது என மக்கள் கேள்வி எழுப்பிவரும் நிலையில், விலை குறைப்பிற்கு பதிலாக தற்போது இருமடங்கு விலை உயர்த்தப்பட்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “அத்தியாவசிய பொருளான பாலின் விலையை சத்தமில்லாமல் உயர்த்திய திமுக அரசு? ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஆவின் கிரீன் மேஜிக் எனும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளுக்கு பதிலாக கிரீன் மேஜிக்+ எனும் பெயர் மாற்றி விலை அதிகமாக விற்பனை. 1 லிட்டர் பால் 44 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் ஒரு சில இடங்களில் 6 ரூபாய் விலை உயர்த்தி 50 ரூபாய்க்கு விற்கப்படும் அவலம். அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்து ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கப் பார்க்கிறதா மு.க.ஸ்டாலின் மாடல் அரசு?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.