அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம் - செங்கோட்டையன் பெயர் மிஸ்ஸிங்!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
2026-ல் நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலையொட்டி, சட்டமன்றத் தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது; கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது; ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் அனைத்தும் உரியவர்களிடம் வழங்கப்பட்டுவிட்டனவா என்பதை கண்காணிப்பது மற்றும் கழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், ஊராட்சி, நகர வார்டு, பேரூராட்சி வார்டு, மாநகராட்சி வட்ட அளவில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் உறுப்பினர்களாகச் சேர்ப்பது முதலான பணிகளை, மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து விரைவாக முடிப்பதற்காக, கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக பொன்னையன் மற்றும் வினோத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தம்பிதுரை எம்.பி மற்றும் விக்னேஷ், திருச்சி புறநகர் தெற்கிற்கு செம்மலை, மதுரை மாநகருக்கு வளர்மதி மற்றும் ஆணிமுத்து, திருச்சி மாநகருக்கு கோகுல இந்திரா மற்றும் அறிவொளி, கரூருக்கு சின்னசாமி, திருநெல்வேலி மாநகருக்கு கருப்பசாமி பாண்டியன், சிவசாமி, சிவ ஆனந்த் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை புறநகர் மாவட்ட பொறுப்பாளர்களாக வேணுகோபால் மற்றும் பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மேற்கு பொறுப்பாளராக சேவூர் ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு புறநகர் மேற்கு பொறுப்பாளராக செல்வராஜ் எம்.எல்.ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொறுப்பாளர்கள் பட்டியலில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.