மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாளையொட்டி மரியாதை செலுத்தப்படும் - அதிமுக அறிவிப்பு

 
admk office

மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 441-ஆவது பிறந்த நாளையொட்டி, மதுரையில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 441-ஆவது பிறந்த நாளான 25.1.2024 - வியாழக் கிழமை காலை 10 மணியளவில், மதுரை, கீழவாசல் திருமலை நாயக்கர் மகால் வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்படும்.


இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர் மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.