மேட்டூர் நகராட்சியை கண்டித்து அதிமுக வருகிற 09ம் தேதி ஆர்ப்பாட்டம்!

 
admk office

சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகிற 09ம் தேதி மேட்டூர் நகராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியில் மக்களை வாட்டி வதைக்கும் குடிநீர் பிரச்சனை, குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகள், மிகவும் மோசமான நிலையில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய் என்று மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத மேட்டூர் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்தும்; சொத்துவரி உயர்வு, கடும் விலைவாசி உயர்வு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத மக்கள் விரோத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், சேலம் புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் வருகிற 09ம் தேதி வியாழன் கிழமை மேட்டூர் நகராட்சி அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.