4 நாட்களாக கொரோனா சிகிச்சை - இன்று வீடு திரும்புகிறார் ஓபிஎஸ்

 
Ops

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை வீடு திரும்புகிறார்.

ops
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சளி பிரச்சனை மற்றும் லேசான காய்ச்சல் இருந்ததால் அவர் மருத்துவமனையில் தங்கி  சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் கடந்த நான்கு நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

OPS

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை வீடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4 நாட்களாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஓபிஎஸ் தற்போது அவர் பூரண குணமடைந்துள்ள நிலையில் அவர் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

tn

முன்னதாக ஓ. பன்னீர்செல்வம் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை அணிந்தபடி சென்னை சட்டப்பேரவை வளாகத்தில்   நடைபெற்ற தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது