உடல்நலக்குறைவு காரணமாக சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி

 
உடல்நலக்குறைவு காரணமாக சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தகைசால் தமிழர், விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா

அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர்கள் என்.சங்கரய்யாவுக்கு சீரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நலம் தேறி அவர் மீண்டும் நலம் பெற்று வர அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்ற வேளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரை நேரில் சென்று பார்க்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று என்.சங்கரய்யா அவர்களை பார்த்ததுடன், மருத்துவர்களையும் சந்தித்து சிகிச்சை தொடர்பாக பேசினர். சங்கரய்யாவின் மகன் நரசிம்மன் மற்றும்  தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்து கவனித்து வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.