மகளிர் தினத்தையொட்டி அனுமதி இலவசம் - எங்கெல்லாம் தெரியுமா?

 
tn

பெண்களை போற்றும் விதமாகவும்,  பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் ,சமூகம் ,பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில் என சகல துறைகளிலும் இன்று பெண்கள் இல்லாத இடங்களில் இல்லை.

tn

பல்வேறு துறைகளில்  உள்ள தடைகளை தகர்த்து, எதிர்நீச்சல் போட்டு புகழ் வெளிச்சத்திற்கு வந்த ஏராளமான சாதனைப் பெண்கள் இருக்கிறார்கள். நாங்கள் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக  பெண்கள் திகழ்கிறார்கள். அடிமைத்தனத்தை ஒழித்து தங்கள் ஆதிக்கத்தால் வேரூன்றி வரும் பெண்கள் , மார்ச் 8ஆம் தேதி மட்டுமல்ல ஆண்டின் அனைத்து நாட்களிலும் போற்றி பாராட்டப் பட வேண்டியவர்கள். 

tn


இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை இன்று கட்டணம் இன்றி பார்வையிடலாம். அதேபோல் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் மூவர் கோயில், சித்தன்னவாசல் குடைவரை கோயில் ஆகிய சுற்றுலா தளங்களில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இலவசம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.