முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டை முற்றுகையிட்ட நிர்வாகிகள்

 
s

அதிமுக முன்னாள் அமைச்சரும் குமராபாளையம் சட்டமன்ற தற்போதைய எம்எல்ஏவுமான தங்கமணி வீட்டை முற்றுகையிட்ட  அதிமுக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள அரசியல் கட்சியினர் தற்போது அறிவித்து வருகின்றனர். அதில் ஒரு கட்டமாக அதிமுக சார்பில் நேற்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக மாநில வர்த்தக அணியை  சார்ந்த ஸ்ரீதேவி P.S. மோகன் என்பவர் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், நாமக்கல் மாநகர செயலாளராக உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி பாஸ்கர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்  அறிவிக்கப்பட்டதற்கு நாமக்கல்லை சேர்ந்த அதிமுகவின் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதனைதொடர்ந்து  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தலைமையில் அதிமுக நாமக்கல் ஒன்றிய செயலாளர்கள் கோபி, செல்வகுமார், ராஜா ரகுமான், பொதுக்குழு உறுப்பினர் மயில் என்.சுந்திரம் ஆகியோர் தலைமையில் 250-க்கும் மேற்பட்டோர் இன்று பள்ளிபாளையம் அருகே உள்ள தங்கமணி வீட்டை முற்றுகையிட வந்தனர். அப்போது தங்கமணி வீட்டில் இல்லை பகுதியில் அதிகமாக அதிமுகவினர் திறண்டதால் உடனடியாக காவல் துணை கண்காணிப்பாளர் கௌதம் தலைமையில் போலீசார் முற்றுகையிட வந்த அதிமுகவினரை தடுத்து நிறுத்தினர் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து  பேசிய முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், அதிமுக நாமக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக P.S. மோகனை அறிவித்துள்ளது எங்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. முன்னாள் அமைச்சர் தங்கமணி தூண்டுதலின் பேரிலேயே இந்த வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் சட்டமன்ற தொகுதியை தங்கமணி தொடர்ந்து  புறக்கணித்து வருகிறார். எனவே இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் அதிமுக எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும் எனவே மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.மேலும் தங்கமணி அவர்களுடைய  வீடு பூட்டப்பட்டு இருந்ததால்  நாமக்கல்லில் முக்கிய முடிவுகள் எடுத்து அதை கூறுவதாக தெரிவித்துவிட்டு மீண்டும் நாமக்கல் புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக கோவிந்தம்பாளையம் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.