தஞ்சை பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு - அதிமுக அறிவிப்பு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் சிறப்புப் பேருரை ஆற்ற இருந்த தஞ்சை மாநகர் பொதுக்கூட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு,16.11.2023 - வியாழக் கிழமை அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 4.11.2023 அன்று தஞ்சை மாநகரில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, டெல்டா மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதாலும், 4.11.2023 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 16.11.2023 - வியாழக் கிழமை மாலை 5 மணியளவில், தஞ்சை மாநகரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.