ஓபிஎஸ் புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு - பண்ருட்டி ராமச்சந்திரன்

 
ஓஒ

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

Image

காஞ்சிபுரம் புரட்சி பயண தொடக்க விழாவில் கொட்டும் மழையில் தொண்டர்களுக்கு வணக்கம் செலுத்தியபடி மேடைக்கு சென்ற ஓ.பி.எஸ், அதே வேகத்திலேயே மீண்டும் மேடையில் இருந்து கீழே இறங்கினார். இதையடுத்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக  பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். 

அதிமுகவை மீட்டெடுப்பதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால்,ஓ.பன்னீர்செல்வத்தின் புரட்சி பயணம் தொடக்க விழா கூட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் திடீரென பெய்யத் தொடங்கிய கனமழையால் ஒதுங்க இடமின்றி கூட்டத்திற்கு வந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.