ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் - உணவுத்தொகை உயர்த்தி அரசாணை

 
govt

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான உணவுத்தொகை  ₹1400-ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவுத் தொகை ₹1,100-ல் இருந்து ₹1,500-ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

tn govt

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணாக்கருக்கான உணவுத் தொகை 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், கல்லூரி மாணாக்கருக்கான உணவுத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.
2. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 04.10.2023 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மாநாட்டு கூட்டத்தில் கீழ்க்காணும் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்கள்:-

tn

“முதலாவதாக, அரசுப் பள்ளி மாணவர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவிகளுக்குத் தற்போது மாணவர் ஒருவருக்கு மாதந்தோறும் உணவுக்காக வழங்கப்பட்டு வரும் தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஆயிரத்து நானூறாக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல், அரசுக் கல்லூரி மாணவ / மாணவியர் விடுதிகளில் தங்கிப் பயிலுவோருக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.