தருமபுர ஆதீனத்தின் போலி ஆபாச வீடியோ - ஆதீன உதவியாளர் செந்தில் கைது!

 
tt

தருமபுர ஆதீனத்தை போலி ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய வழக்கில், தேடப்பட்டு வந்த ஆதீன உதவியாளர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

tn

தருமபுரம் ஆதீனம் அல்லது தருமை ஆதீனம் என்பது சைவ மடங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் இம்மடம் அமைந்துள்ளது.  தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தற்போது மடத்தை வழிநடத்தி வருகிறார். இந்த சூழலில் ஆபாச வீடியோ, ஆடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என தருமபுரம் ஆதீனத்திடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக, பாஜக மாவட்டத் தலைவர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பாஜக பிரமுகர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடுதுறை பாஜக பிரமுகர் வினோத், குடியரசு, விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேர் கைதாகினர். தலைமறைவான 5 பேருக்கு போலீஸ் வலைவீசியது. 

tn

இந்நிலையில் மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தை போலி ஆபாச வீடியோவை வைத்து மிரட்டிய வழக்கில், தேடப்பட்டு வந்த ஆதீன முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில், உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சிறப்பு தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.