"16வது நாள் காரியம் முடிகிற வரை.."- ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி

 
ஆதவ் அர்ஜூனா ஆதவ் அர்ஜூனா

16வது நாள் காரியம் முடிகிற வரை யாரும் பேச முடியாத அளவுக்கு மிகுந்த வலியில் இருக்கிறோம் என த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா

கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்  கழக பரப்பரைக் கூட்டத்தில்  விஜய் பேசும்போது ஏற்பட்ட நெரிசல் சிக்கி  41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மேற்குமாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு அக்டோபர் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ளனர். 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, “16வது நாள் காரியம் முடிகிற வரை யாரும் பேச முடியாத அளவுக்கு மிகுந்த வலியில் இருக்கிறோம். உறவுகளை இழந்து பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம். தலைவர் ஆணைப்படி கைதான மாவட்டசெயலாளர்கள் அனைவரையும் உடனே வெளிவர முயற்சி எடுப்போம். நம் குடும்பத்தை சார்ந்த 41 பேர்கள் இறந்த துக்கத்தினை தவெக , பதினாறு நாட்கள் காரியங்கள் முடியும்வரை அனுஷ்டித்து வருகிறது. வரும் 13 ம் தேதி காரியங்கள் முடிந்த அன்று முதல் கட்சி பணிகள் வழக்கம்போல தொடரும்” என்றார்.