அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜூனா மாமியார்

 
s

அ.தி.மு.கவில் இணைந்தார் ஆதவ் அர்ஜூனா மாமியார் லீமா ரோஸ்.

 

இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து அண்மையில் விலகிய லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் லீமா ரோஸ் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த 14 ஆண்டுகளாக ஐஜேகேவில் இருந்த இவர், அண்மையில் அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார். ஆனால் அக்கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனக் கூறி அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகினார். தற்போது அதிமுகவில் இணைந்துள்ள லீமா ரோஸ், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருவாடானை அல்லது கோவை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் லீமா ரோஸ் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடதக்கது. 

Advertisement