ஆதவ் அர்ஜூனா Vs உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்..!
தமிழ்நாடு சட்டசபையில் இன்று கோவை மாணவன் கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “எங்களது ஆட்சியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏன் உங்களுடைய ஆட்சியில் நடவடிக்கை எடுப்பது இல்லை? அமைச்சர் போட்டோ காட்டினார். ஆனால், அமைச்சர் சரத்குமார் போதை பயன்படுத்திய வீடியோவை உலகமே பார்த்தது.
ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் போதை பொருட்களை பயன்பாடு கூறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் இருந்து பறிமுதல் செய்தது. சென்னை கமிஷனர் ஆக இருக்கும் குமராஜ் கேட்டாலே, கடந்த ஆட்சியில் எவ்வளவு போதைப்பொருட்கலை ஒழித்தோம் என சொல்லுவார்.
அதற்கு ஆதவ் அர்ஜுனா கூறுகையில், “எங்களது நோக்கம் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது அல்ல. போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். ஆனால், தற்பொழுது ஆட்சியில் 264 கோடி ரூபாய் போதை பொருள் விழிப்புணர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எத்தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கி போதை பொருள் விழிப்புணர்வு முன்னெடுப்பை எடுத்தீர்கள்?
அதற்கு பதிலளித்த உதயநிதி, “போதைப் பொருட்கள் பயன்படுத்தியவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? எவ்வளவு போதைப் பொருள் ஒழிக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பான செய்திகள் செய்தி குறிப்பில் உள்ளது. கடந்த ஆட்சியில் போதைப் பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தற்போதைய முதல்வர் எதற்காக கடந்த காலங்களில் போதைக்கு எதிராக சிறப்பாக செயல்படுத்திய காவலர்களுக்கு விருதுகளை வழங்கினார்? இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ஏன் பதிலளிக்க மறுக்கிறார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் விக்னேஷ், “சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருது கொடுப்பது வழக்கம். அம்மா அவர்களது ஆட்சி காலத்திலிருந்து இது நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியில் போதைக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் பல்வேறு போதைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், அதைவிட அதிகமாக தற்போதைய 100 நாள் தவெக ஆட்சியில் போதை பொருள் ஒழிக்கப்பட்டது என்பதை மானிய கோரிக்கையில் தெரிவிப்போம்” என்றார்.
அதன் பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்த திட்டத்தை கொண்டு வந்தது திமுக தான். தவறான தகவலை பேரவையில் பதிவு செய்ய வேண்டாம் தெரிந்து கொண்டு பேசுங்கள்” என்றார்.

