மத்திய அமைச்சரை சந்தித்து நிதி கோரிய ஆதவ் அர்ஜூனா

 
s

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இன்று (17.11.2026) டெல்லியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலை நேரில் சந்தித்தார்.

Image

பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஒன்றிய அரசின் மாண்புமிகு துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவாலை இன்று (17.11.2026) டெல்லியில் நேரில் சென்று சந்தித்து, தமிழ்நாட்டின் முக்கிய கடல்சார் கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியுதவி கோரி கோரிக்கை சமர்ப்பித்தனர்.

பின்வரும் திட்டங்களுக்கு உடனடி நிதியுதவி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

1. இராமேஸ்வர துறைமுக மேம்பாடு (இராமேஸ்வரம் தலைமன்னார் (இலங்கை) பன்னாட்டு பயணிகள் படகு போக்குவரத்து துவங்குதல் - ரூ.118 கோடி

2. கடலூர் பசுமை வள ஆழ்கடல் துறைமுக மேம்பாடு - ரூ.4,700 கோடி

3. கடல் நடைபாதைகள் மற்றும் படகுத் துறைகள் அமைத்தல் (சென்னை சென்னை புதுச்சேரி பயணிகள் மெரீனா, மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி) படகு போக்குவரத்து துவக்குதல் - ரூ.900 கோடி

4. பக்கிங்காம் கால்வாய் புனரமைத்தல் மற்றும் ஆழப்படுத்துதல் (தேசிய நீர்வழி

4) - ரூ.2,700 கோடி

5. மேற்கு மற்றும் கிழக்கு கடல் பகுதியை இணைக்கும் பாம்பன் கால்வாயை 10 மீட்டருக்கு ஆழப்படுத்துதல் - ரூ.1,200 கோடி

இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.