தவெகவில் இணைகிறார் ஆதவ் அர்ஜூனா
Jan 29, 2025, 19:25 IST1738158957181

விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, தவெகவில் இணைகிறார்.
விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் ஓரிரு நாளில் இணைகிறார் ஆதவ் அர்ஜூனா. த.வெ.க.வின் கட்டமைப்பை உருவாக்குவதில் ஆதவ் அர்ஜூனாவுக்கு முக்கிய பொறுப்பு தரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் வியூகங்களை வகுப்பதில் ஜான் ஆரோக்கியசாமியுடன் ஆதவ் இணைந்து செயல்படுவார். தனது ‘வாய்ஸ் ஆப் காமன்’ என்ற நிறுவனம் மூலம் தவெகவுக்கு தேர்தல் பணிகள் செய்யவும் ஆதவ் அர்ஜூனா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக தலைவர் விஜயுடன், ஆதவ் அர்ஜூனா சந்தித்தார்.