விலை உயர்ந்த கார்களையெல்லாம் வேட்புமனுவில் மறைத்த ஆதவ் அர்ஜூனா
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, தன்னிடம் இருக்கும் அனைத்து விலை உயர்ந்த கார்களை எல்லாம் வேட்புமனுவில் குறிப்பிடாமல் மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 30 ஆம் தேதி வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் ஆதவ் அர்ஜூனா. அவரது பிரமாண பத்திரத்தில், மனைவி பெயரில் உள்ள நிறுவனங்களை மறைத்துள்ளார். மேலும் கார்கள் பட்டியல் சுமார் 10 விலை உயர்ந்த கார்களை மறைத்துள்ளார். Jeep Wrangler , Land Rover ஆகிய சொகுசு கார்களின் விவரங்களை ஆதவ் குறிப்பிடவில்லை.
MARTIN REAL ESTATE PRIVATE LIMITED, MARTIN PROPERTY DEVELOPERS PRIVATE LIMITED, EXPLICIT TOWERS AND TRADERS PRIVATE LIMITED ஆகிய மூன்று நிறுவனங்கள் ஆதவ் அர்ஜூனாவின் மனைவி பெயரில் உள்ளன. இந்நிறுவனங்களில் 2025 - 2026 களில் 25 கோடி முதல் 18 கோடி வரை வருவாய் மற்றும் லாபம் என காட்டப்பட்டுள்ளது. இது போன்று 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒன்று கூட ஆதவ் அர்ஜூனா தன் தேர்தல் உறுதி மொழி பத்திரத்தில் காட்டாமல் மறைத்துள்ளார். இந்நிலையில் தேர்தல் அதிகாரிகள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

