தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராகிறார் ஆதவ் அர்ஜூனா

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா, தவெகவில் இணைந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த CTR நிர்மல் குமாருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஜ்மோகனுக்கு தவெக கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.