அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

 
udhayanidhi-stalin-3

இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலை மற்றும் நீலாங்கரையிலுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சரின் உயிருக்கு உத்தரப்பிரதேச சாமியார் மிரட்டல் விடுத்திருந்தநிலையில், 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

Udhayanidhi

சனாதனம் குறித்து பேசி அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி என அயோத்தியை  சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா அறிவித்திருந்த நிலையில் உதயநிதியின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Udhayanidhi stalin

சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போது சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள்.  அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . சிலவற்றை  ஒழிக்க வேண்டும்;  எதிர்க்க முடியாது என்று கூறியிருந்தார். 
இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்துள்ளார்.  ஆனால் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் உதயநிதி,  எனது தலையை சீவ பத்து கோடி? எதற்கு பத்து ரூபாய் சீப்பு போதுமே என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.