மின்சார ரயில் ரத்து எதிரொலி - நாளை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு

 
metro

தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை நிறுத்தம் காரணமாக நாளை ஒரு நாள் மட்டும், பச்சை மற்றும் நீலம் ஆகிய 2 வழித்தடங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  தாம்பரம் மற்றும் கடற்கரை இடையேயான மின்சார இரயில் சேவை நாளை அக்டோபர் 31, 2023, 10:18 மணி முதல் 14:45 மணி வரை நிறுத்தப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும், பயணிகளின் வசதிக்காவும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கீழ்கண்ட வழித்தடங்களில் நாளை (31.10.2023) கூடுதல் மெட்ரோ இரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

நீலவழித்தடம்:

விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். அதேப்போல், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ இரயில் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

metro

பச்சை வழித்தடம்:

அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் முதல் புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையம் முதல் பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

அதேப்போல் புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையம் முதல் விமான நிலையம் மெட்ரோ வரை
கோயம்பேடு வழியாக) காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். மேற்குறிப்பிட்டுள்ள கூடுதல் மெட்ரோ இரயில் சேவைகள் நாளை 31.10.2023 (செவ்வாய்க்கிழமை) மட்டுமே. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நீட்டிக்கப்பட்ட மெட்ரோ இரயில் சேவைகளை பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.