நெல்லை வந்தேபாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
Jan 7, 2025, 17:45 IST1736252132000
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருநெல்வேலி- சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கப்பட்டது. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே வந்தே பாரத் ரயில் நின்று செல்லும். அண்மையில் சென்னை- நெல்லை இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டடது.
இந்நிலையில் நெல்லை வந்தேபாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக வரும் 11 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.