6 நாட்களுக்கு கூடுதல் பேருந்துகள் & சிறப்பு ரயில் சேவை - 500 போலீசார் பாதுகாப்பு ..

 
MTC bus

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து கூடுதல்  பேருந்துகள் இயக்கப்பட உள்ளதற்கு  சுமார் 500 போலீசார் பாதுகாப்பு வழங்கவுள்ளனர்.  

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “வருகின்ற 15.08.2024 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக 14.08.2024 ஆம் தேதி முதல் 19.08.2024 ஆம் தேதி வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லவிருக்கும் பயணிகளுக்கும் விடுமுறை முடித்து சென்னை வரவிருக்கும் பயணிகளுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக இன்று 13.08.2024 கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தாம்பரம் காவல் கூடுதல் ஆணையர், தாம்பரம் காவல் போக்குவரத்து துணை ஆணையர், போக்குவரத்து துறை அதிகாரிகள், CMDA துறையை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு  14- ஆம் தேதி (இன்று) முதல் வழக்கமான வழித்தடங்களில் இயக்கவிருக்கும் பேருந்துகளுடன் சுமார் 500 கூடுதல் பேருந்துகளை இயக்க ஆலோசிக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது. 

police

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகமும் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு துணை ஆணையர் தலைமையில் சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் உட்பட சுமார் 500 போலீசார், பயணிகளுக்கு 24*7 பாதுகாப்பு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இரயில் சேவையை பொறுத்த மட்டில் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்கள் இன்று 14.08.2024 பிற்பகல் 15.45 மணி மற்றும் இரவு 23.30 மணி ஆகிய இரண்டு நேரங்களில் இயக்கப்பட உள்ளதாகவும், இந்த ரயில்கள் தாம்பரத்தில் நிற்காது எனவும் அதற்கு பதிலாக செங்கல்பட்டில் நின்று செல்லும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் தாம்பரத்தில் இருந்து திருச்சி வரை செல்லும் ரயில் இரவு 23.00 மணிக்கு இயக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் இதற்கு தகுந்தவாறு தங்கள் பயணங்களை திட்டமிட்டு மேற்படி சேவைகளை பயன்படுத்தி போலீசாருக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.