திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் நடிகை விஜயலட்சுமி!

 
vijayalakshmi vijayalakshmi

சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் அதனால் தற்கொலை முயற்சி ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார். இந்த சூழலில் சென்னை மாநகர காவல் ஆணையரை கடந்த 28ஆம் தேதி நேரில் சந்தித்த நடிகை விஜயலட்சுமி சீமானை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதனிடையே, சீமான் மீதான புகாரில் நடிகை விஜயலட்சுமியை திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர்.  இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  அழைத்து வரப்பட்டு நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டார். 

seeman

இந்த நிலையில், தன் மீது வீண் பழி சுமத்துவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் இன்று சீமான் செய்தியாளர்களை சந்தித்த போது விஜயலட்சுமி புகார் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய சீமான், தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி சுமத்தப்படுகிறது. விசாரித்து என் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கட்டும். குற்றச்சாட்டுகளை கண்டு நான் அஞ்சவில்லை, எங்கும் ஓடி ஒளியவில்லை என கூறினார்.