முதலமைச்சர் விஜய் உடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் சந்திப்பு..!
நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது கணவர் நிக்கோலாயுடன் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்
தமிழக முதல் அமைச்சர் விஜய்யை திரைப்பிரபலங்கள் பலரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார்கள். நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்தார். அதேபோல, நடிகை வரலட்சுமியும் அவரது கணவர் நிக்கோலாய் சச்தேவ்யுடன் முதல் அமைச்சரை சந்தித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "விஜய் குறித்து ஏராளமான கருத்துகள் பேசப்படலாம். ஆனால் இறுதியில் அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர். முதல் முறையே தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவது மிகப்பெரிய தைரியம், உறுதி மற்றும் மக்களின் அளவற்ற அன்பின் வெளிப்பாடு" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விமர்சிப்பது எளிது என்றாலும், ஒரு தலைவரின் செயல்பாடுகளை காலம்தான் நிரூபிக்கும் என்றும், அதுவரை பொறுமை, மரியாதை மற்றும் ஊக்கத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்கார்' திரைப்பட படப்பிடிப்பு காலத்தில் விஜயிடம் கூறிய சில விஷயங்களை தற்போது சந்தித்தபோது நினைவுகூர்ந்து இருவரும் சிரித்ததாகவும், அப்போதே அவரது அரசியல் பயணம் தொடங்கும் என உணர்ந்ததாகவும் வரலட்சுமி கூறியுள்ளார்.
அதேபோல், சந்திப்பின்போது பெண்கள் நலன் தொடர்பான சில முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதித்ததாகவும், தமிழ்நாட்டு மக்களுக்காக பல நல்ல மாற்றங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, "தமிழ்நாட்டு மக்கள் அவரது தலைமையில் வளமாக வாழ வேண்டும். அவருக்கு என் வாழ்த்துகளும், ஆசிகளும்" என்று தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
Thalapathy..!!
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath5) July 16, 2026
I pondered over what to say about this post but then I realised so much has been said already..so just wanted to say one thing..
People may say a 100 different things..
But at the end of the day ..
C.Joseph Vijay is our Chief Minister
And he’s here to stay..!!… pic.twitter.com/oOP6YT6Iso
null

