நடிகை வரலட்சுமி திருமண வரவேற்பு கோலாகலம்

 
வரவேற்பு

நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Image

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சசிகுமார் நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை, காட்டேரி, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிகை வரலட்சுமி நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை வரலட்சுமிக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Varalaxmi Sarathkumar MK Stalin


நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திரையுலகிலிருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ராதாரவி, நாசர், சித்தார்த்,  நடிகரும், சத்யராஜின் மகனுமான சிபி ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.