பிரபல நடிகை வி.வசந்தா காலமானார்!!

 
tn

பழம்பெரும்  நடிகை வி. வசந்தா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.

death

கடந்த சில மாதங்களாகவே தமிழ் திரையுலகில் பிரபலங்களின் மரணம் என்பது தொடர் செய்தியாக வருகிறது. இதனால் ரசிகர்களும்,  திரையுலகை சேர்ந்தவர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அந்த வகையில் பிரபல பழம்பெரும் நடிகை வி. வசந்தா  உயிரிழந்துள்ளார்.  எம்.கே. தியாகராஜ பாகவதர் நாடக குழுவில் இடம் பெற்று சினிமாவுக்குள் நுழைந்த இவர்,  இரவும் பகலும் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் காலடி பதித்தார்.

tn

 நடிகர் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்த புகழ் பெற்ற இவர் கார்த்திகை தீபம் படத்தில் அசோகனுக்கு ஜோடியாக நடித்தார்.  இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் படத்தில் அவருக்கு அம்மாவாகவும்,  மூன்றாம் திரைப்படத்தில் ஸ்ரீதேவி அம்மாவாகவும் இவர் நடித்துள்ளார். தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் உயிரிழந்தார். இவரது இறுதி சடங்குகள் இன்று மதியம் 1:30 மணி அளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை வசந்தாவின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.