‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை உருக்கமாக பகிர்ந்த நடிகை ஊர்வசி..!

 
1

தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளரான பாக்யராஜ், 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு கடந்த சனிக்கிழமை ஜூன் 27,இயக்குநர் பாக்யராஜ் வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது.

கே.பாக்யராஜ்  திரைப்பயணம் மற்றும் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:
பிறப்பு மற்றும் ஆரம்ப காலம்பிறப்பு: ஜனவரி 7, 1953.இடம்: ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே சிறுவலூரில்  உள்ள வெள்ளாங்கோயில்.

பெற்றோர்: கிருஷ்ணசாமி - அமராவதி

திரைத்துறைப் பயணம் உதவி இயக்குநர்: தனது குருநாதரான இயக்குநர் பாரதிராஜாவிடம் '16 வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார்.நடிகராக அறிமுகம்: 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இயக்குநராக அறிமுகம்: 1979-ல் வெளியான 'சுவரில்லாத சித்திரங்கள்' படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்தார்.திரைக்கதை மன்னன்ஒருவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்து ஒரே ஆண்டில் பல வெற்றிப் படங்களை (எ.கா: மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா) கொடுத்த ஒரே சாதனையாளர் பாக்யராஜ் ஆவார்.

முக்கிய திரைப்படங்கள்இயக்கியவை: 
சுவர் இல்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, சின்ன வீடு, இது நம்ம ஆளு.நடித்தவை: 16 வயதினிலே, தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங்

தனிப்பட்ட வாழ்க்கை இவர் முதலில் நடிகை பிரவீணா என்பவரைத் திருமணம் செய்தார், அவர் 1983-ல் காலமானார்.பின்னர், 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை பூர்ணிமாவை (Poornima) 1986-ல் மறுமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு சாந்தனு (நடிகர்) மற்றும் சரண்யா (நடிகை) என இரு குழந்தைகள் உள்ளனர்.

விருதுகள் மற்றும் சாதனைகள்'முந்தானை முடிச்சு' (1983) திரைப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர் (Filmfare) சிறந்த நடிகர் விருதை வென்றார்.2014-ல் SIIMA வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.'பாக்யா' (Bhagya) எனும் வாரப் பத்திரிகையைத் தொடங்கி பல நாவல்களையும் எழுதியுள்ளார்.இயக்குநர் பாக்யராஜ் தன்னுடைய 73-வது வயதில், மாரடைப்பு காரணமாக ஜூன் 27, 2026 அன்று சென்னையில் காலமானார். இவரது மறைவு தமிழ் திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் பெரும் பேரிழப்பாகும்/

‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகை ஊர்வசி ஒருமுறை பகிர்ந்து கொண்டிருந்தார்.

“படப்பிடிப்பில் கேமரா ஆஃப் நிலையில் இருந்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். குறிப்பாக செட்டில் குழந்தைகள் என்னைச் சுற்றி நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால், ‘ஷாட் ரெடி’ என்று இயக்குநர் சொன்ன உடனே எனக்கு பயம் வந்துவிடும்,” என்று ஊர்வசி நினைவுகூர்கிறார்.
தன்னை நடிக்க ஊக்கப்படுத்தியதில் இயக்குநர் பாக்யராஜின் பங்கை நன்றியுடன் நினைவுகூரும் ஊர்வசி, “என்னுடைய நடிப்பை வடிவமைத்ததே பாக்யராஜ் சார் எடுத்த முயற்சிகள்தான். படம் வெற்றி பெற நான் தனியாக எதையும் செய்யவில்லை. செட்டில் யாராவது என்னை திட்டினால், அப்படியே நடந்து வீட்டுக்கே போய்விடுவேன்,” என்று கூறியுள்ளார்.

கல்பனா, ஊர்வசி ஆகிய சகோதரிகளை தமிழில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் கே. பாக்யராஜ். ஊர்வசியை தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்திய இயக்குநரும், அவரது முதல் கதாநாயகனும் அவர்தான். 1983ஆம் ஆண்டு வெளியான ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தின் மூலம், வெறும் 13 வயதிலேயே ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார்.படப்பிடிப்பின்போது தனது உணவுப் பழக்கத்தைக் கூட கட்டுப்படுத்த ஒரு மேலாளரை நியமித்திருந்ததாக ஊர்வசி கூறுகிறார்.

“நான் சரியாக சாப்பிடுகிறேனா என்பதை கண்காணிக்க ஒரு மேலாளரை வைத்திருந்தார்கள். அவர் எப்போதும் ஒரு கம்புடன் என் பின்னால் சுற்றி வருவார். உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடச் சொல்லி என்னை மிரட்டுவார்,” என்று அவர் சிரித்தபடி நினைவுகூர்ந்தார்.
உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிப்பது ஊர்வசிக்கு ஒருபோதும் பயமாக இருந்ததில்லை. மாறாக, அவைதான் அவருக்குப் பிடித்தமான காட்சிகள்.
“‘முந்தானை முடிச்சு’ படத்தில் இருந்த உணர்ச்சிகரமான காட்சிகள் எனக்கு எந்த சிரமத்தையும் தரவில்லை. நான் வளர்ந்தது என் அப்பாவின் நாடகக் குழுவின் சூழலில். அப்பாவும் மற்ற கலைஞர்களும் நடித்ததைப் பார்த்தே நான் வளர்ந்தேன்,” என்று அவர் கூறினார்.

சில காட்சிகளில் சேலை அணிந்து நடந்து காட்டி, அந்தக் கதாபாத்திரத்தின் உடல் மொழியையே பாக்யராஜ் நேரடியாக நடித்துக் காட்டி கற்றுக் கொடுத்ததாகவும் ஊர்வசி நினைவுகூர்கிறார்.“இன்றும் எந்தப் படப்பிடிப்புக்கும் மேக்கப் போடுவதற்கு முன் அவரை நான் நினைத்துப் பார்ப்பேன். அவருடைய வழிகாட்டுதல் இல்லையென்றால் இன்று நான் யாராக இருந்திருப்பேன் என்பதே எனக்குத் தெரியாது,” என்று உருக்கமாக கூறியுள்ளார்.1985ஆம் ஆண்டு வெளியான ‘சின்ன வீடு’ திரைப்படம், நடிகை கல்பனாவின் முதல் தமிழ் திரைப்படமாகும்.