பாக்யராஜ் மறைவால் நிலைகுலைந்து போன நடிகை ஊர்வசி உருக்கம்!
பிரபல இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு, பிரபல நடிகை ஊர்வசி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை; முதலில் என்ன செய்வதென்றே தெரியவில்லை; அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்; இதை தாங்குமளவு குடும்பத்தினருக்கு கடவுள் அமைதியை கொடுக்க வேண்டும்" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே அவரைப் போல கதை, திரைக்கதை, வசனம் எழுதுவர்கள் இல்லை. அவரைக் கேட்காமலேயே பலரும் அவரது திரைக்கதைகளை எடுத்துள்ளார்கள். தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் எடுத்துள்ளார்கள். ஏனெனில், அவரைப் போல வித்தியாசமாக எழுத முடியாது என்பதாலேயே அவர்கள் எடுத்தார்கள். நானே அப்படி பல படங்களில் அவரது திரைக்கதையில் நடித்துள்ளேன் என்றார்.
பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'முந்தானை முடுச்சு'. விமர்சனத்திலும், வசூலிலும் மாபெரும் வரவேற்பு பெற்றது .

