"இந்த வயதிலும் நாடகமாடுவது வெட்க கேடு”- த்ரிஷா திடீர் பதிவு
“இந்த வயதில் இப்படிப்பட்ட நாடகங்கள் வெட்கக்கேடானது... போய் பணம் சம்பாதித்து நிம்மதியைத் தேடிக்கொள்” என நடிகை த்ரிஷா பகிர்ந்த பதிவு வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.300 கோடியை வசூலித்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா நடிக்க ஒப்பந்தமான படங்கள் குறித்த எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனால் அவர் அரசியலில் கால் பதிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட கருத்து நெட்டிசன்கள் மத்தியில் சலசப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், “இந்த வயதில் இப்படியெல்லாம் நாடகம் போடுவது வெட்கக்கேடு. போய்ப் பணம் சம்பாதித்து நிம்மதியாக வாழுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் புருவத்தை உயர்த்தி முறைக்கும் எமோஜி சிம்பிளையும் அவர் வைத்திருக்கிறார். த்ரிஷா யாருக்கோ மறைமுகமாக செய்தி ஒன்றை சொல்லவருகிறார் என்பது மட்டும் புரிகிறது. ஆனால் அந்த நபர் யார் என்பதே நெட்டிசன்களின் தற்போதைய கேள்வியாக உள்ளது.

