விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் நடிகை த்ரிஷா
Updated: May 10, 2026, 09:32 IST1778385748807
விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் நடிகை த்ரிஷா உற்சாகமாக கலந்து கொண்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து வெற்றி அறிவிப்புகள் வெளியான நிலையில் 100-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் பெரும்பான்மை நிருபிக்க முடியாமல் ஆட்சி அமைக்க தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆதரவளித்த நிலையில் இன்று காலை 10 மணி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் விழாவில் ராகுல்காந்தி, த்ரிஷா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

