கடத்தப்பட்டதாக வீடியோ... போலீசாரை அலையவிட்ட நடிகை சுனைனா

 
Actress Sunaina

நடிகை சுனைனாவை காணவில்லை என வெளியான செய்தி விளம்பரம் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Sunaina : மஞ்ச காட்டு மைனா.. ரசிகர்களை சுண்டி இழுத்த சுனைனா!-actress  sunaina latest photo - HT Tamil

தமிழ் சினிமாவில் கடந்த 208 ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதன்பின் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, சமர், சில்லு கருப்பட்டி, லத்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மகாராஷ்டிராவை பூர்வீகமாக கொண்ட இவர், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சுனைனாவைக் காணவில்லை என கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவர் கடத்தப்பட்டாரா என்ற கேள்வியுடன் வீடியோ ஒன்று வைரலானது. அதற்கு சில நாட்களுக்கு முன் நடிகை சுனைனா, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே, கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியை தனது தோழிகளுடன் கண்டுகளித்ததாக புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். 

இதனால் நடிகை சுனைனா, கடைசியாக சென்னை காவல்துறையினர் எங்கெல்லாம் சென்றார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் எழும்பூர், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். வளசரவாக்கத்தில் அவர் தங்கியிருந்த வீட்டிலும், அண்மையில் அவர் நடித்த படங்களின் தயாரிப்பு நிறுவனங்களிலும் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு தயாரிப்பு நிறுவனம் கையாண்ட யுத்தி தான், நடிகையைக்காணவில்லை என வீடியோ தயாரித்து வைரலாக்கியது என்பது தெரியவந்தது. பலரும் அந்த வீடியோ உண்மை என நம்பி ரெஸ்க்யூ சுனைனா என்கிற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இதனைத்தொடர்ந்து போலீசாரும் விசாரணை அளவுக்கு சென்றது நகைப்பூட்டுகிறது.