நடிகை சுதா வாழ்க்கையில் ஏற்பட்ட துயரம்! ஒரு கையெழுத்தால் பறிபோன கோடி சொத்து.. பரிதாப நிலை
நான் போட்ட ஒரே ஒரு கையெழுத்தால் என்னுடைய மொத்த சொத்தும் காணாமல் போய்விட்டது என நடிகை சுதா வருத்தமாக கூறியுள்ளது.
அம்மா கேரக்டர்களில் கலக்கும் சுதா தன் வாழ்க்கையில் அனுபவித்த கசப்பான அனுபவங்களை அண்மையில் பகிர்ந்துள்ளார். அதில், “நான் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தேன். என் வாழ்க்கை உண்மையிலேயே ஒரு 'சில்வர் ஸ்பூன்' வாழ்க்கைதான். வீட்டில் உதவியாளர்கள் இருந்தார்கள். மூன்று கார்களுக்கு மூன்று ஓட்டுநர்கள் இருந்தனர். அனைத்து வசதிகளுடனும் நான் வளர்ந்தேன். நான்கு சகோதரர்களுக்கு ஒரே தங்கை என்பதால், நான் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டேன். ஆனால், எனது தந்தை கடுமையாக நோயால் பாதிக்கப்படடபோது அந்த வசதியான வாழ்க்கை திடீரென மாறியது. அப்பாவின் சிகிச்சையின் போது அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனக்கு எட்டு வயது இருக்கும்போது, எங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனது பள்ளிப் படிப்பைத் தொடர தாயின் தாலியை அடமானம் வைத்தது நினைவு இருக்கிறது. நான் திரைத்துறையில் நுழைந்த பிறகு பணம் வரத் தொடங்கியது, ஆனால் அதனுடன் புகழின் கசப்பான உண்மைகளும் நிதி ரீதியான தவறுகளும் வந்தன.
என்னுடைய கையிருப்பு மொத்த பணத்தையும் போட்டு நான் ஒரு காலத்தில் டெல்லியில் ஒரு ஹோட்டலைத் தொடங்கினேன். அதில் என்னிடம் இருந்த ஒவ்வொரு ரூபாயையும் இழந்தேன். ஒரே ஒரு கையெழுத்தால், எனது சேமிப்பு அனைத்தும் காணாமல் போனது. எனக்கு ஒரு மகன் உள்ளார், ஆனால் ஒரு தகராறுக்கு பிறகு எங்கள் உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பிறகு அவர் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டதோடு, என்னுடன் இருந்த அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டார். கணவரும் என்னை விட்டு பிரிந்துவிட்டார். இப்போது நான் தனிமையில்தான் வாழ்கிறேன்” என வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

