தவிச்ச வாய்க்கு வீட்டுக்கு முன்னாடி கொஞ்சம் தண்ணீ வைங்க - நடிகை சஞ்சனா நடராஜன்..!

 
1

2014 ஆம் ஆண்டு வெளியான "நெருங்கி வா முத்தமிடாதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் நடிகை சஞ்சனா நடராஜன்.

அதன் பிறகு மாதவனின் "இறுதி சுற்று" திரைப்படத்தில் நடித்த சஞ்சனா, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகிலும் படங்களில் நடிக்க துவங்கினார். தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான "ஜகமே தந்திரம்", மற்றும் "சார்பட்டா பரம்பரை" உள்ளிட்ட திரைப்படங்கள் சஞ்சனா நடராஜனுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் பைங்கிளி என்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்து மக்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றிருந்தார். தற்பொழுது தமிழ் திரை உலகில் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.இறுதியாக நடிகை சஞ்சனா நடராஜன் இவ்வாண்டு துவக்கத்தில் வெளியான போர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில் NGO நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சஞ்சனா நடராஜன் பேசியதாவது, தவிச்ச வாய்க்கு வீட்டுக்கு முன்னாடி கொஞ்சம் தண்ணீ வைங்க. நாய்க்கு, பூனைக்கு, பறவைகளுக்கு சாப்பாடு வெக்கலைனாலும் பரவாயில்லை தண்ணீர் வையுங்க. இந்த NGO கிட்டத்தட்ட 2500 வாட்டர் பவுல் கொடுக்குறாங்க. இது ரொமப் பெரிய விஷயம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது ரொம்ப சந்தோசமா இருக்கு.
PLEASE WATER TO STRAYERS. என கூறினார்.