விஜயகாந்த் உருவப்படத்திற்கு நடிகை ரம்பா அஞ்சலி

 
tn

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர்  மாதம் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.

vijayakanth

விஜயகாந்தின் உடலானது தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு தினசரி மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

rnr

இந்நிலையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவப்படத்திற்கு நடிகை ரம்பா அஞ்சலி செலுத்தினர். கனடாவில் குடும்பத்துடன் வசித்து வரும் ரம்பா இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள நிலையில் விஜயகாந்த் இல்லத்திற்கு தனது கணவருடன் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.