நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி
Jul 30, 2025, 19:44 IST1753884858865
நடிகை ராதிகா சரத்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார், டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 28 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராதிகா, தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இன்னும் 5 நாட்கள் சிகிச்சைக்கு பின் இல்லம் திரும்புவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ராதிகா உடல்நலம் குறித்து அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள், சமூக வலைதளங்களில் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ராதிகா சரத்குமார் உடல்நலம் விரைவில் மீண்டு வர, அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பிரார்த்திப்பதாக கூறியுள்ளனர்.


