சினிமாவில் பரபரப்பு: அக்கா அம்பிகா மீது ரூ.46 கோடி பண மோசடி புகார் அளித்த நடிகை ராதா!
தமிழ்சினிமாவின் 80ஸ் காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஹீரோயின்களாக வலம்வந்தவர்கள் நடிகை அம்பிகா மற்றும் ராதா. அக்கா, தங்கைகளாக இருந்தபோதும் தங்களுடைய நடிப்பு திறமையால் தங்களுக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்த இவர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர்கள். தற்போது சினிமாவிலிருந்து விலகியிருக்கும் இவர்கள், சின்னத்திரையில் சீரியல் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகின்றனர்.
இந்தசூழலில் தான் தன்னுடைய அக்கா அம்பிகா பண மோசடி செய்துவிட்டதாக சென்னை காவலர் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா மோசடி புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ரூ.46 கோடி பண மோசடி செய்ததாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சகோதரி நடிகை அம்பிகா, சகோதரர் மல்லிகார்ஜூன் மீது நடிகை ராதா புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே இல்லத்தில் வசித்த போது நடிகை ராதாவின் 5 செக்குகளை நடிகை அம்பிகை மற்றும் சகோதரர் ஆகியோர் மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது. இத்தகவல் ராதாவிற்கு தெரியவந்ததும் வங்கி கணக்குகளை சோதனை செய்து பார்த்த போது 5 செக்குகளில் ரூ.46 கோடி அளவில் செக் மோசடி நடந்துள்ளது முழுமையாக தெரியவந்துள்ளது.
செக் மோசடி தொடர்பாக நடிகை ராதா நேரடியாக சென்னை காவல் ஆணையத்தில் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

