“யார் நம்மை கீழ்தரமாக பேசினாலும்..”- நயன்தாரா பரபரப்பு பேச்சு
Jan 10, 2025, 20:14 IST1736520271344
மதுரையில் நடைபெற்ற "FEMI 9 MEGA CELEBRATION - 2025" நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக நடிகை நயன்தாரா பங்கேற்றார்.
அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய நடிகை நயன்தாரா, “நம் மீது நமக்கு தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் பெரிய விஷயம் வேறு எதுவும் இல்லை. யார் என்ன சொன்னாலும், எப்படி நம்மை கீழ்த்தரமாக பேசினாலும் கவலைப்படாமல், நம் வேலையை உண்மையாகவும் உறுதியாகவும் செய்தால் தானாகவே self confidence வரும், அது நம் வாழ்க்கையை மாற்றிவிடும்.
யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும், தவறாக நடந்து கொண்டாலும், நேர்மையாக உழைக்க வேண்டும். வாழ்க்கையில் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் விட்டுவிடக்கூடாது. உண்மையும், உழைப்பும் உயிருள்ள வரை நமக்கு இருந்தால் என்றுமே வாழ்க்கை மிகவும் வெற்றி நிறைந்ததாய் இருக்கும், தோல்வி இருக்காது” என்றார்.