மன்சூர் அலிகான் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பேன் - குஷ்பு
மன்சூர் அலிகான் பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பேன் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படத்தில் நடிகர் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இடம்பெறவில்லை என நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல் லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அதாவது தான் கூறிய கருத்தை தவறாக சித்தரித்து சிலர் வெளியிட்டு வருவதாக கூறிய்யிருந்தார். மன்சூர் அலிகானின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக, மன்சூர் அலிகான் பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பேன் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட அசுத்தமான மனதை யாரும் விட்டுவிட முடியாது. நான் த்ரிஷாவுடன் உடன் நிற்கிறேன். இந்த மனிதன் மிகவும் கேவலமான மனநிலையில் பேசுகிறான். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.