’நான் ஒரு முஸ்லீம்; ஆனால் எனக்கு கோவில் கட்டினார்கள்’ இதுவே சனாதனம்- குஷ்பு

 
குஷ்பு

நான் ஒரு முஸ்லீம் பின்னணியில் இருந்து வந்தவன், ஆனாலும் மக்கள் எனக்காக கோவில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளர்.

குஷ்பு

சனாதன ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் ஆகும். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் வேறு ஒன்றும் கிடையாது. சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். மத்திய அரசு கொண்டு வரும் விஸ்வகர்மா திட்டத்தை திமுக எதிர்க்கும்.” என பேசினார். 


இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் ஒரு முஸ்லீம் பின்னணியில் இருந்து வந்தவன், ஆனாலும் மக்கள் எனக்காக கோவில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம். அனைத்தையும் நம்புங்கள், மதிக்கவும், நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளுங்கள். திராவிட கழக தலைவர் கி.வீரமணி சனாதன தர்மத்தின் உண்மையை ஏற்கிறார், திமுக ஏன் மறுக்கிறது? அவர்களின் தோல்விகளில் இருந்து விலக இது ஒரு நொண்டி வழி” எனக் குறிப்பிட்டுள்ளார்.