"உலகம் முழுவதும் விலைவாசி உயர்வு; தவெக மீது பழி சுமத்த முடியாது"- நடிகை குஷ்பு

 
குஷ்பு

விலைவாசி உயர்வுக்கு தவெக மீது பழி சுமத்த முடியாது என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். 

விலைவாசி உயர்வு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, "தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் விலைவாசி உயர்ந்துள்ளது. மத்திய கிழக்குப் போர் காரணமாக இந்த விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. கொஞ்ச நாள் நாம் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும். போர் முடியும் வரை இதன் தாக்கம் இருக்கும். தவெக வந்ததால்தான் இது நடக்கிறது என்று பழி சுமத்த முடியாது. வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் வைக்க கூடாது. எப்போதுமே ஒரு ஆட்சி மாறும்போது, பணவீக்கம் இருக்கதான் செய்யும். புத்தக கொள்முதல் முறைகேடு எந்தவிதத்திலும் மன்னிக்க முடியாத குற்றம். இதற்கு பின்னாடி யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு குறித்து உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார் என்றால் அதனை அவர்  நிரூப்பிக்கப்பட்டும். ஆதாரம் இருந்தால் தாராளமாக நீங்கள் கேள்வி கேட்கலாம்" என்றார்.