ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரி நடிகை கஸ்தூரி மனு
ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரி நடிகை கஸ்தூரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கர்கள் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறான கருத்தை தெரித்ததாக கூறப்படுகிறது. அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஐதராபாத்தில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே நடிகை கஸ்தூரி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரி நடிகை கஸ்தூரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை; நிபந்தனையை தளர்த்தக் கோரி கஸ்தூரி தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் கைதான கஸ்தூரிக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தது.