நடிகை கனகாவின் தந்தையும் பிரபல இயக்குனருமான தேவதாஸ் காலமானார்..!

 
1

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. இவர் கரகாட்டக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதன் காரணமாக கனகா தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.

தமிழில் முதல் படம் ஹிட்டான பிறகு ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார் கனகா. அதேபோல் தெலுங்கிலும் பல படங்களில் புக் ஆனார். இதன் காரணமாக நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தார் அவர். சூழல் இப்படி இருக்க திடீரென அவர் காணாமல் போனார். ஒருகட்டத்தில் கனகா உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதுகூட ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது.


அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். யாரையும் சந்திப்பதில்லை, வெளியே வருவதில்லை என்று ஏகப்பட்ட விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதற்கு காரணம் தேவிகாவின் மரணம் ஒன்று என்றும் இன்னொரு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி என்றும் பேசப்பட்டது.

1990-ம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்த நடிகை தேவிகா மகள் கனகாவுடன் தனியாக வசித்து வந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கனகா நடித்து வந்த நிலையில், 2002-ம் ஆண்டு தேவிகா மரணமடைந்தார். 

இந்நிலையில், நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் காலமானார். . சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.